குற்றம்

ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0: சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 31.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0: சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 31.5 கிலோ கஞ்சா பறிமுதல்

நிவேதா ஜெகராஜா

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 31.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, கடந்த 4 நாட்களில் அங்கு அதிரடியாக தொடர் சோதனைகள் நடத்தப்பட்டது. அந்த அதிரடி தொடர் சோதனையின் முடிவில், 31.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

ஹவுரா விரைவு ரயில் மூலம்தான் தொடர்ந்து கஞ்சா பொட்டலங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தொடர் சோதனையின்முடிவில், 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர் ரயில்வே காவல்துறை சோதனைக்கு பயந்து, ரயில் பெட்டிகளிலேயே கஞ்சா பொட்டலங்களை விட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 சோதனை தொடரும் என ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது.