குற்றம்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

webteam

தருமபுரி நகரில் விற்பனைக்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி நகர பகுதிகளில் போலீஸார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அஞ்சகாரத்தெருவில் உள்ள வீட்டில் 5 டன் அளவில் பான்மசாலா, குட்கா உள்ளிட்டவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட‌ மூவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் மற்றும் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் பரவலாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து தகவல் வந்தது. இதனையடுத்து இன்று தருமபுரி நகர காவல்துறை ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையில், காவலர்கள் பல குழுக்களாகப் பிரிந்து தருமபுரி நகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தருமபுரி நகரில் உள்ள அஞ்சகாரத்தெருவில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து காவல் துறையினர் அந்த வீட்டை சோதனையிட்டதில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ், குட்கா, பான்பராக் போன்ற பொருட்கள் கடைகளுக்கு அனுப்புவதற்காக பெட்டியில் நிரப்பி தயார் நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 5 டன் மதிப்பிலான போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு விட்டின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.