செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது pt desk
குற்றம்

விருதுநகர்: தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக 3 பேர் கைது – போலீசார் விசாரணை

சாத்தூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

webteam

செய்தியாளர்: A.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (56). கடந்த மாதம் 28ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ராமலட்சமியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றனர்.

அதேபோல் சடையம்பட்டி வளர் நகர் பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி பேராசிரியை ராமலட்சுமி (42) என்பவரிடமும் அந்த மர்ம கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருவரிடமும் இருந்து 15 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர்.

arrested

இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கரூர் பகுதியில் இருந்து திருடப்பட்ட வாகனம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இதைத் தொடர்ந்து கோவையைச் சேர்ந்த சூரிய பிரசாந்த் (24) மற்றும் திருச்சியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (29) மற்றும் ராஜ்கிட்டு (20) ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.