குற்றம்

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்: வாட்ஸ் அப்பில் வந்த புகாரால் போலீஸ் அதிரடி நடவடிக்கை

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்: வாட்ஸ் அப்பில் வந்த புகாரால் போலீஸ் அதிரடி நடவடிக்கை

webteam

அடையாறு துணை ஆணையருக்கு வாட்ஸப்பில் வந்த புகாரின் அடிப்படையில் சென்னை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமன், மக்கள் 24 மணி நேரமும் தன்னை தொடர்புகொண்டு புகார் அளிக்க செல்போன் எண் ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து அந்த செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் ஒன்றை அளித்து இருந்தனர்.

அதில், துரைப்பாக்கம் திருமலை நகர் விரிவாக்கம் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இதனடிப்படையில், துணை ஆணையர் துரைப்பாக்கம் போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஸ்பா என்ற பெயரில் மூன்று நபர்கள் பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தரகர்கள் அசோக், ஹேமதுல்லா, ராஜராஜன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேரும் மிரட்டி பாலியல் தொழில் செய்ய வைத்த 3 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ்அப்பில் அளித்த புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த துணை ஆணையர் விக்ரமிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.