குற்றம்

100 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக மோசடி: ஊராட்சித் தலைவர் உட்பட இருவர் மீது குண்டாஸ்

100 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக மோசடி: ஊராட்சித் தலைவர் உட்பட இருவர் மீது குண்டாஸ்

kaleelrahman

100 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக கோவையில் மருத்துவமனை உரிமையாளரிடம் மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர்செல்வம் என்பவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளர் மாதேஸ்வரனுக்கு 100 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறியுள்ளார். அதற்கு கமிஷன் தொகையாக மாதேஸ்வரனிடம் இருந்து 2 கோடியே 85 லட்சம் ரூபாயை பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து நீண்ட நாட்களாகியும் கடனை பெற்றுத் தராததால், கமிஷன் தொகையை திரும்ப கேட்டுள்ளார் மாதேஷ்வரன். அதற்கு பன்னீர்செல்வம் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை மத்திய குற்றப்பிரிவில் மாதேஸ்வரன் புகார் அளித்துள்ளார். அதனைதொடர்ந்து, சென்னையில் தங்கியிருந்த பன்னீர்செல்வம், அவருக்கு உடந்தையாக இருந்த செல்வகுமார் ஆகியோரை கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்யதனர்.

இந்த நிலையில், கோவை மத்திய குற்றப்பிரிவு ஆணையர் உத்தரவின் பேரில், பன்னீர்செல்வம், செல்வகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.