குற்றம்

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

webteam

பள்ளி மாணவி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு தேனி மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக தெரிவித்ததோடு திருமண ஆசையும் காட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த மாணவியை ராஜேஷ்கண்ணன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு தேனி மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், 10,000 ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியை கடத்தியதற்காக மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அளிக்கப்பட்டது. தண்டனை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என தேனி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து ராஜேஷ்கண்ணனை காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.