கொரோனா வைரஸ்

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

Sinekadhara

இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளில் உலக சுகாதார அமைப்பு கோவிஷீல்டுக்கு மட்டும் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கியது. ஆனால், கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைபெறவில்லை எனக்கூறி அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. இரண்டு தடுப்பூசிகளுமே இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும், கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் உலக நாடுகளுக்கு பயணிக்கமுடியாது என்ற நிலை இருந்தது. இதனால் கோவாக்சினின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியதாக பேசப்பட்டது.

இந்நிலையில், அவசரகால பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் இனி சிக்கல் இருக்காது.