கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் என எதிர்பார்க்கலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார். ஆனால் அதுபற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.
சமூகத் தொற்று குறித்து, சிறப்புக் குழுவுடன் பேசிய டெட்ராஸ், ’’நமக்கு தற்போது தடுப்பூசி தேவைப்படுகிறது. இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நம்பிக்கையும் இருக்கிறது.’’ எனக் கூறியுள்ளார்.
இதுவரை 9 தடுப்பூசிகள் மாதிரி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் வெற்றிப்பெறும்போது 2021 இறுதிக்குள் 2 பில்லியன் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.