உருமாறிய கொரோனா குறித்த பேச்சு எழுந்துள்ள நிலையில், அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை Genome sequence. அதுகுறித்து தெளிவாகப் பார்ப்போம்.
முழு மரபணு வரிசைமுறை என்பதன் ஆங்கிலப் பதமே Genome sequence என்பதாகும். முழு மரபணு வரிசைமுறை என்பது ஒரு குறிப்பிட்ட உயிரினத்துடைய மரபணுவின் முழுமையான DNA வரிசையை கண்டறியப் பயன்படுத்தப்படும் முறை இது. நோய்தொற்றின் மூலம் எது? அது எவ்வாறு பரவுகிறது? ஆகியவற்றை இந்த முறையில் கண்டறியலாம். இணை நோய்தொற்றுகள், சிக்கலான நோயின் பங்கை கண்டறிந்து வகைப்படுத்தவும் Genome sequence உதவுகிறது.
மேலும் நாடு முழுவதும் வைரஸ் பரவல் எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் எவ்வாறெல்லாம் மாற்றமடைந்துள்ளது என்பது குறித்த தகவல்களை வழங்கவும் மரபணு வரிசை முறையை முழுமையாக ஆய்வு செய்வது அவசியமாகிறது.
நோய் கிருமியின் மரபணுவை ஆய்வு செய்யும்போது, அதன் பரிணாம வளர்ச்சியை கண்காணிக்க முடியும். முழு மரபணு வரிசைமுறை ஆய்வுமூலம் வைரஸின் தன்மை மட்டுமின்றி, சிகிச்சை செயல்திறனை பாதிக்கும் வகையில் வைரஸ் மாறுகிறதா என்பதையும் கண்டறிய உதவும்.