கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை அச்சுறுத்தும் விதமாக மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்புப் பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்துள்ளது. மகாராஷ்ட்ரா, பீகாரைத்தொடர்ந்து தமிழகத்திலும் இந்த பாதிப்பு தலையெடுத்துள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்புப் பூஞ்சை காற்றில் இருக்கக்கூடியது. மூக்கில் உள்ள சைனசில், மியூகஸ் திரவத்தை பாதித்து கண் மற்றும் மூளை என வேகமாக பரவக்கூடியது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றாது. ஆனால், தொற்றியவருக்குள் வேகமாக பரவக்கூடியது. இதனால் இறப்பு சதவிகிதமும் அதிகம். இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன என்று விளக்குகிறார் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர் திரிவேணி.
இந்த கருப்பு பூஞ்சை தொற்று நீரிழிவு நோயாளிகளை அதிகம் பாதிப்பதால் கருப்பு பூஞ்சை தாக்காமல் இருக்க என்ன செய்யக்கூடாது என்று டாக்டர் மோகன் விவரிக்கிறார்
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஆரோக்கிய உணவும், நோய் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்துவதும் மிகவும் அவசியம் என்பது மருத்துவர்களின் முக்கிய அறிவுறுத்தலாக இருக்கிறது.
கருப்புப் பூஞ்சை நோய்:
கருப்புப் பூஞ்சை நோய் - அறிகுறிகள்
கருப்புப் பூஞ்சை நோய் எப்படி தொற்றுகிறது?
கருப்புப் பூஞ்சை நோய் - முன்னெச்சரிக்கை
கருப்புப் பூஞ்சை நோய் - கொரோனா பாதித்தவர்கள் என்ன செய்யவேண்டும்?