நாம் கொரோனா பெரும் தொற்று முடியும் காலத்தில் இருக்கிறோம் என்றும், தடுப்பூசி குறித்து இன்னும் மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென இந்தியாவின் தலைசிறந்த வைராலஜி விஞ்ஞானிகளில் ஒருவரான ஜாக்கப் ஜான் கூறியுள்ளார். அவரிடம் புதிய தலைமுறை செய்தியாளர் நடத்திய பிரத்யேக உரையாடலில் கேட்கப்பட்டவை...
தற்போதும் தடுப்பூசிகள் குறித்த பெரிய அச்சம் மக்களிடம் இருக்கிறது பெரிய பெரிய பிரபலங்கள் கூட தடுப்பூசிகளை எதிர்க்கிறார்கள் கனடா போன்ற நாடுகளில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகிறது. இதையெல்லாம் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இவையெல்லாம் பெரிய அளவிலான தவறான தகவல்களால் ஏற்படக்கூடியது. மக்களின் நம்பிக்கையின்மை காரணமாகவும் இது ஏற்படுகிறது. மக்கள் அரசாங்கத்தின் வாய் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது விஞ்ஞானிகள் சொல்வதை மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது மற்றும் மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவது போன்றவையெல்லாம் நிகழும்பொழுது வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும். ஆனால் இதற்கு எளிமையான தீர்வு எல்லாம் கிடையாது.
தொடர்ந்து மக்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். மக்களிடம் தொடர்ந்து கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எந்தவொரு தடுப்பூசியாக இருந்தாலும், அதன் பாதுகாப்பு தன்மை குறித்த விஷயங்களை எதற்காகவும் மறைக்கக்கூடாது இதுதான் மிகவும் முக்கியம் அனைவரும் மிக நேர்மையாக இருக்க வேண்டும் மக்களிடம் தேர்ந்தெடுக்கும் விஷயத்தை ஒப்படைக்க வேண்டும்.
இவையெல்லாம்தான் உங்களிடம் இருக்கக்கூடிய உண்மையான விஷயங்கள்; நீங்களே அதைத் தேர்ந்தெடுங்கள் என்ற வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும். தடுப்பூசி என்பது உங்களுக்கு மட்டுமல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்கும் ஆனது என்பதை சொல்ல வேண்டும். தனிநபர் பாதுகாப்பைத் தாண்டி நல்ல விளைவுகளை கொடுக்கக்கூடியவைகளை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். தற்போதைய காலத்தில் கூகுள் எந்த ஒரு தகவலையும் யாருக்கும் கொடுக்க தயாராக இருக்கிறது அதுதான் பெரும் பிரச்னையாகவும் இருக்கிறது.
நீங்கள் இந்த பெரும்தொற்று முடியும் காலத்தில் இருக்கிறோம் என்பதை நினைக்கிறீர்களா?
நிச்சயமாக நாம் பெரும்தொற்று முடியும் காலத்தில் இருக்கிறோம். பிப்ரவரி 17ஆம் தேதியிலிருந்து தற்போதைய தேதி வரை நாம் பெரும் தொற்று முடியும் இடத்தில் இருக்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை.
- நிரஞ்சன்