கொரோனா வைரஸ்

மாநிலங்களுக்கு இதுவரை 140.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கியுள்ள மத்திய அரசு

மாநிலங்களுக்கு இதுவரை 140.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கியுள்ள மத்திய அரசு

Sinekadhara

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு இதுவரை 140.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் வேகப்படுத்தி உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 134.61 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 1,40,47,52,710 டோஸ்கள் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள் வசம் 16,49,10,821 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.