கொரோனா வைரஸ்

ஆன்லைன் மூலம் கொரோனா இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

ஆன்லைன் மூலம் கொரோனா இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

நிவேதா ஜெகராஜா

(கோப்பு புகைப்படம்)

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், அரசின் இழப்பீட்டு தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும் மேல் கடந்து விட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின் படி உரிய இழப்பீட்டை வழங்கக் கோரி வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் “தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்” என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் தமிழக அரசால் நிதியுதவி வழங்கப்படும் என்ற அரசாணையும் வெளியானது.
இந்த இழப்பீட்டை குடும்பத்தினர் மட்டும் வாரிசுதாரர் பெறுவதை எளிமையாக்கும் வகையில் www.tngov.in என்ற அரசின் இணையத்தில் what's new என்ற பகுதியில் Ex-gratia for COVID 19 என்ற லிங்கை தேர்வு இணைப்பை தேர்வு செய்தால், ஆன்லைன் மூலம் இழப்பீட்டுக்கான விண்ணப்பத்தை சம்ர்ப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.