ஐஐடி கான்பூரை சேர்ந்த பேராசிரியர் மணின்ந்த்ரா அகர்வால், இந்தியாவில் மூன்றாவது அலை கொரோனா எப்போது அதிகரிக்கும், எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து கணித்துள்ளார். தனது கணிப்பின் முடிவில், ‘இந்தியாவின் இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளின் உச்சத்தை, மூன்றாவது அலை கொரோனா முறியடிக்கும்’ என்று கூறியுள்ளார்.
அவர் கூறியவற்றின் முழு விவரங்கள், இங்கே: “இந்தியாவில் நாடு தழுவிய அளவில் நமக்கு கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி, கொரோனா இந்த மாத (ஜனவரி) இறுதியில் அதன் உச்சத்தை தொடும். விரைவில் கொரோனா இரண்டாவது அலையின்போது உருவான எண்ணிக்கைகளையும் தாண்டும். இந்த 3-வது அலையில் கொரோனா உச்சம் மிக வேகமாக நேர்க்கோட்டில் உயருமென்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அதிகரிக்கும் கொரோனா, மார்ச் மாத பிற்பாதியில் சரிவை நோக்கி சென்று இயல்பு நிலைக்கு வரும்.
தற்போதைக்கு தலைநகர் டெல்லியில் தினசரி தொற்றானது 20,000 என்று பதிவாகி வருகின்றது. இந்த எண்ணிக்கை ஜனவரி பிற்பாதியில் 40,000 என்று உயருமென கணிக்கிறோம். இதேபோல மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் இம்மாதத்திலேயே தொற்று எண்ணிக்கை உயரும். சில இடங்களில், இம்மாத இறுதியில் தொற்று முடிவடையும் செய்யுமென கணிக்கிறோம். வட இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பரப்புரைகள் தொடங்கி, நாட்டின் ஒவ்வொரு பகுதியில் கூடும் கூட்டமும் கொரோனா உச்சத்திற்கான ஒரு காரணம்தான். கொரோனா பரவலை குறைக்க, கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என்றுள்ளார்.
தொடர்புடைய செய்தி: ”மருத்துவமனையில் அனுமதிப்படுவோர் விகிதம் அதிகரிக்கலாம்... தயாராக இருங்கள்” - ராஜேஷ் பூஷண்