தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் 1,600- ஐ நெருங்கியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1,591 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் 1,600- ஐ நெருங்கியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் இந்த பாதிப்பு 1,580 என்றிருந்தது. இதன்மூலம் கடந்த 2 நாள்களாக சற்று குறைந்துவந்த பாதிப்பு எண்ணிக்கை, இன்று சிறியளவில் உயர்ந்துள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக மருத்துவத்துறை வெளியிட்டுக்கும் அறிக்கையின்படி, “கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் 27 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,217 என உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மேலும் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல கோவையில் 201 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும், தஞ்சையில் 119 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,52,296 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் 1,591 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் இதுவரை தமிழ்நாட்டில் தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 26,37,010 என்றாகியுள்ளது.
இன்றைய தினம் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 91 பேர்.
இதையும் படிங்க... மூதாட்டிக்கு 3ஆவது முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக புகார்
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,537 என்று உயர்ந்துள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,85,244 என உயர்ந்துள்ளது. சிகிச்சையிலிருபோர் எண்ணிக்கை, இன்று நிலவரப்படி 16,549 என்றாகியுள்ளது” என்பது தெரிகிறது.