கொரோனா வைரஸ்

காசநோய் மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்துமா?

காசநோய் மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்துமா?

jagadeesh

காசநோய் மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முனைப்பில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காசநோய் தடுப்பு மருந்து மூலம் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த முடியுமா என்பது குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் சிறுவயது முதலே குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பு மருந்து வழங்கப்படுவதாகவும், அதனால்தான் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் நியூயார்க் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காசநோய் தடுப்பூசி திட்டம் அமலில் இல்லாத அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் 4 மடங்கு அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விஞ்ஞானிகள், காசதோய் தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துமா என்பது குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.