கொரோனா வைரஸ்

தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி பள்ளி, கல்லூரி திறப்பது உறுதி: தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி பள்ளி, கல்லூரி திறப்பது உறுதி: தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

நிவேதா ஜெகராஜா

பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்படுவது உறுதி என தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 - 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்தச் சூழலில், மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் அந்த ஆலோசனை முடிவில்,

‘தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15 ம் தேதி வரை நீடிக்கிறது.

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளில் மூடப்படும். கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் விடுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது’ போன்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளது..

சமய விழாக்களை முன்னிட்டு (விநாயகர் சதுர்த்தி, மரிய அன்னை பிறந்தநாள்) மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்களுக்கான தடை தொடர்கிறது’ போன்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.