கொரோனா வைரஸ்

கொரோனா அச்சத்தால் 4 மாதங்கள் குழந்தைகளை அறையில் பூட்டிவைத்த பெற்றோர்

கொரோனா அச்சத்தால் 4 மாதங்கள் குழந்தைகளை அறையில் பூட்டிவைத்த பெற்றோர்

Sinekadhara

கொரோனா வைரஸ் பற்றிய பயத்தால் தனது 3 குழந்தைகளையும் 4 மாதங்கள் அவரவர் அறையில் வைத்து பெற்றோர்களே பூட்டிய சம்பவம் ஸ்வீடனில் நடந்துள்ளது.

உலகெங்கிலும் கொரோனா பயத்தால் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டாம் என ஸ்வீடன் அரசு தடை விதித்துள்ளது. இதனால் பயமடைந்த பெற்றோர்கள் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேறுவதை தடுத்துள்ளனர். தங்கள் 3 குழந்தைகளும் வெளியே செல்லவேண்டும் என அடம்பிடித்ததால் அவர்களை வீட்டிற்குள்ளேயே அவரவர் அறைகளில் வைத்து பெற்றோர்களே 4 மாதங்களாக பூட்டிவைத்துள்ளனர். மேலும் கதவுகளுக்கு வெளியே பலகைகளை வைத்து மூடிவைத்திருந்தனர்.

இவர்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். ஸ்வீடன் மொழியை சரியாக பேசவோ, புரிந்துகொள்ளவோ முடியாத காரணத்தால் தங்கள் சொந்த நாட்டின் கடுமையான விதிமுறைகளை பின்பற்றியதால் இவ்வாறு நடந்துகொண்டதாக குழந்தைகள் வழக்கறிஞர் கூறியுள்ளார்.