கொரோனா வைரஸ்

6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி - சீரம் இன்ஸ்டிட்யூட்

6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி - சீரம் இன்ஸ்டிட்யூட்

Sinekadhara

இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி சம்பந்தமான குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சிஐஐ மாநாட்டில் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் 6 மாதங்களில் தடுப்பூசி அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.