டெல்டா வகையைவிட, ஒமைக்ரான் கொரோனா வைரஸ் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள இம்பிரியல் கல்லூரியின் ஆராய்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், டெல்டாவைவிட ஒமைக்ரான் 5.4 மடங்கு மீண்டும் தொற்றை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் மனிதர்களிடையே உருவான எதிர்ப்பு சக்தியை ஒமைக்ரான் கொரோனா வகை குறைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை கொரோனா பாதித்த சுமார் 2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.