கொரோனா வைரஸ்

"தொற்றின் தீவிரத்தை பொறுத்தே எதிர்ப்பு சக்தி காலம்" -ஆய்வு முடிவில் தகவல்

"தொற்றின் தீவிரத்தை பொறுத்தே எதிர்ப்பு சக்தி காலம்" -ஆய்வு முடிவில் தகவல்

Sinekadhara

ஒருவருக்கு ஏற்படும் கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையே அவர் உடலில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதை தீர்மானிக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்று ஏற்பட்டவரின் உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை உலகின் பிரபல மருத்துவ இதழான லான்செட் வெளியிட்டுள்ளது.

இதில் கொரோனா தொற்றியவரின் உடலில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி சில வாரங்களில் இருந்து சில பத்தாண்டுகள் வரை நீடிக்கும் என்றும் இது அவர் உடலில் ஏற்பட்ட தொற்றின் தீவிரத்தன்மையை பொறுத்து அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவருக்கு தடுப்பூசி போடப்படுவதால் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி நீடிக்கும் காலம் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளதாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளின் செயல்திறன் அடிப்படையில் பார்க்கும்போது அவற்றை ஆண்டுதோறும் போட்டுக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் லான்செட் மருத்துவக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.