கொரோனா வைரஸ்

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை விவகாரம் - சென்னையில் இதுவரை 24 பேர் கைது

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை விவகாரம் - சென்னையில் இதுவரை 24 பேர் கைது

Veeramani

சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ததாகவும் பதுக்கி வைத்ததாகவும் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் இந்த மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் சிலர் பதுக்கிவைத்தும், கள்ளச்சந்தையில் பெற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தும் வந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் மருத்துவர்கள், மருந்து பதுக்கியவர்களை அடுத்தடுத்து கைது செய்தனர். அந்த வகையில் சென்னையில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 234 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.