இந்தியாவில் 3ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி தற்போதைக்கு தேவையில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கொரோனா 3ஆவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்வதாகத் தெரிவித்தார். மேலும், புதிய தொற்றுகள் அதிகரிக்காதது, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கணிசமாக ஏற்பட்டிருப்பது உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது தற்போதைக்கு 3ஆவது தவணை தடுப்பூசி தேவையில்லை என ரன்தீப் குலேரியா தெரிவித்தார். எனினும் எதிர்காலத்திலும் 3ஆவது டோஸ் தேவையில்லை என்பது குறித்து இப்போது உறுதிப்பட எதுவும் கூற முடியாது என்றும் குலேரியா தெரிவித்தார்.
நாடெங்கும் 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து தொற்றுநோய்களுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அடுத்த வாரம் பரிசீலிக்க உள்ள நிலையில் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.