முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை இன்று காலை தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 10ஆம் தேதி, டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் இருந்த ரத்தக்கட்டி ஒன்று அறுவைசிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.
கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என்று வந்த நிலையில் நுரையீரல் தொற்றுநோயும் உருவாகி, இப்போது அதற்காக சிகிச்சைபெற்று வருகிறார். அவருடைய ஹீமோடைனமிகஸ் (இதயத் துடிப்பு) அதே நிலையில் இருப்பதாகவும், எந்த முன்னேற்றமும் இல்லாததால், குறிப்பிட்ட அளவுகளில் மருந்துகளைச் செலுத்தி மருத்துவர்கள் உன்னிப்புடன் பராமரித்து வருவதாகவும், இன்னும் வெண்ட்டிலேட்டர் உதவியதுடன் இருப்பதாகவும் மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.