கொரோனா வைரஸ்

பொள்ளாச்சி: அரசுப் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் உட்பட 3 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி: அரசுப் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் உட்பட 3 பேருக்கு கொரோனா

kaleelrahman

பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், இங்கு 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு தளர்வு காரணமாக, பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில், புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில், பள்ளியில் ஏழாம் மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என மூன்று பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுகாதாரத்துறை சார்பில், பள்ளி வளாகம் வகுப்பறை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.