கொரோனா வைரஸ்

இந்தியாவில் தற்போதைக்கு பயன்பாட்டுக்கு வராது ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள்?

இந்தியாவில் தற்போதைக்கு பயன்பாட்டுக்கு வராது ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள்?

Veeramani

ஃபைசர், மாடர்னா ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் தற்போதைக்கு பயன்பாட்டுக்கு வராது என தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய போது வெளிநாடுகளில் இருந்து ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் தற்போது உள்நாட்டிலேயே போதிய அளவு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதாலும் அவற்றை ஏற்றுமதி செய்யுமளவுக்கு நிலைமை இருப்பதாலும் ஃபைசர், மாடர்னா ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் அரசு ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இவ்விரு தடுப்பூசிகளை பாதுகாத்து வைக்க சிறப்பு வசதிகள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை 22% மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 65% பேருக்கு குறைந்தது ஒரு தவணை ஊசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் கோவிஷீல்டு 88.45%, கோவாக்சின் 11.44% ஸ்புட்னிக் 0.1% ஆகும்.