கொரோனா வைரஸ்

ஸ்டான்லி மருத்துவமனையில் நிரம்பிய 95% படுக்கைகள்: காத்திருக்கும் நோயாளிகள்

ஸ்டான்லி மருத்துவமனையில் நிரம்பிய 95% படுக்கைகள்: காத்திருக்கும் நோயாளிகள்

Sinekadhara

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்கு சிசிச்சை பெற செல்பவர்களுக்கு படுக்கை ஒதுக்க நீண்ட நேரம் ஆவதால், நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை சென்னையில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 95 சதவிகித படுக்கைகள் நிரம்பியுள்ளன. ஆயிரத்து 200க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 சதவிகித படுக்கைகள் மட்டுமே மீதமிருப்பதால், கொரோனா சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் செல்பவர்ளுக்கு படுக்கைகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் நோயாளிகள் ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.