கொரோனா வைரஸ்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி: தமிழக அரசு

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி: தமிழக அரசு

Veeramani

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரேசில், மொரீசியஸ், ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தியிருந்தாலும், தடுப்பூசி செலுத்தாவிட்டாலும் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும், அதில் கொரோனா நெகட்டிவ் என்று இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.