கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட மூன்று பேரில் ஒருவரின் தொற்று, பரவும் தன்மை இல்லாதது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பரவல் தன்மை குறித்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. கொரோனா பரிசோதனை முடிவில் பாசிட்டிவிட்டி என்பதற்கான அளவுகோலை பல ஆய்வகங்கள் மிகக் குறைவாக வைத்திருப்பதாகவும், தொற்று பரவல் ஆபத்து இல்லாதவர்களை ஆய்வகங்கள் தேர்வு செய்வதும் தெரிய வந்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு வெப்பநிலையில் பிசிஆர் சோதனைக்கான மூக்கு, தொண்டை வழி மாதிரி எடுக்கப்படும் நிலையில், வைரஸ் தொற்று இருப்பதற்கான ரசாயன அளவும் மாறுபடுவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பாசிடிவிட்டிக்கான உறுதியான அளவு இல்லாத நிலையில், தொற்று கண்டறியப்படும் மூன்று பேரில் ஒருவர் தொற்றைப் பரப்பும் தன்மையில்லாதவராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனிமைப்படுத்திக் கொள்ளும் மூவரில் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றைப் பரப்பும் தன்மையில்லாதவராக இருப்பதாகவும் தனிமைப்படுத்தல் அவசியமில்லாதவராக இருப்பதாகவும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், பிசிஆர் பரிசோதனை முறையே குழப்பங்கள் நிறைந்ததாக உள்ளதாகவும் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.