கொரோனா வைரஸ்

மற்ற கொரோனா வகைகளைவிட 70% வேகமாக பரவும் ஒமைக்ரான்

மற்ற கொரோனா வகைகளைவிட 70% வேகமாக பரவும் ஒமைக்ரான்

Sinekadhara

டெல்டா வகை கொரோனாவைவிட ஒமைக்ரான் 70 மடங்கு வேகமாக பரவுவதாக ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மனிதரின் சுவாச மண்டல அடிப்பகுதியில் நுரையீரலுக்கு காற்றைச் செலுத்தும் மூச்சுக் குழாயில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதாக அந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற கொரோனா திரிபுகளைவிட ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் தொற்றின் பாதிப்பு குறைவாக இருப்பதால் நோயின் தன்மை குறைவாகவே இருப்பதாக ஹாங்காங் பல்கலை ஆய்வில் ஆறுதலான தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.