கொரோனா வைரஸ்

இந்தியா: ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்தது

இந்தியா: ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்தது

Veeramani

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 151 பேர் ஒமைக்ரான் வகை தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் நாடு முழுவதும் தற்போது 427 பேர் ஒமைக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகப்பட்சமாக தலைநகர் டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிராவில் 141 பேரும், கேரளாவில் 57 பேரும், குஜராத்தில் 49 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில்-43, தெலங்கானாவில்-41, தமிழ்நாடு-34, கர்நாடகா-31, ம.பி.-9, ஆந்திரா-6, மே.வங்கம்-6, அரியானா-4, ஒடிசா-4, சண்டிகர்-3, ஜம்மு-காஷ்மீர்-3, உ.பி-2, இமாச்சல் பிரதேசம், லடாக், உத்தரகாண்ட் டில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டெல்லி உள்ளிட்ட பல இரவு நேர ஊரடங்கை அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.