கொரோனா வைரஸ்

கேரளாவில் இருந்து தமிழகம் வர இ பாஸ் கட்டாயம்: எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்!

கேரளாவில் இருந்து தமிழகம் வர இ பாஸ் கட்டாயம்: எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்!

kaleelrahman

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு 'இ பாஸ்' கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையி, குமுளியில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.

கேரளாவை போல் தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு 'இ பாஸ்' கட்டாயமாக்கப்பட்டு, குமுளி சோதனைச்சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட கேரளாவில் கொரோனாவின் முதல் அலையில் நோய்த்தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டது. இதையடுத்து, கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்தில் துவங்கி உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களால் தற்போது தினசரி நோய்த்தொற்று ஆறாயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது.

அதேபோல் தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று குறைந்திருந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் eregister.tnega.org என்ற இணைய தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்து 'இ பாஸ்' பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி சோதனைச்சாவடியில், கேரளாவில் இருந்து தமிழகம் வருவோரிடம் தமிழக போலீஸார் 'இ பாஸ்' உள்ளதா என பரிசோதித்து அவர்களை தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். ஆனால் இன்னும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் எதுவும் துவக்கப்படவில்லை.