கொரோனா வைரஸ்

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நேரில் வழங்கும் திருவேற்காடு நகராட்சி

kaleelrahman

திருவேற்காடு நகராட்சியில் கொரோனா நோய் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு கொரோனா அச்சுறுத்தலையும் மீறி அத்தியாவசிய பொருட்களை வீடு,வீடாக சென்று நகராட்சி அதிகாரிகள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

கொரோனா பரவல் 2-வது அலை வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் திருவேற்காடு நகராட்சியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 18 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதற்காக சிவன் கோவில் அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திருவேற்காடு நகராட்சியில் 5 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மொத்தம் 118 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி மற்றும் சுகாதார ஆய்வாளர் அல்பர்ட் அருள்ராஜ் ஆகியோர் நேரில் சென்று மாத்திரைகள், அரிசி பருப்பு ,காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை இலவசமாக நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.