கொரோனா வைரஸ்

3-வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

3-வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

நிவேதா ஜெகராஜா

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள முழு நிலையில் தயாராக இருப்பதாகவும், இதற்காக ரூ.23,123 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஐ.டி.துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் கணித்திருப்பதை தொடர்ந்து, அரசு சார்பில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக பொறுபேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் அவர்களது சொந்த மாநிலங்களில் மக்களின் ஆதரவை பெற நேரிடையாக மக்களை சந்திக்க பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதனொரு பகுதியாகவே அனுராக் தாகூர், தனது சொந்த மாநிலமான ஹிமாச்சலத்தில் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு வைத்துதான், இக்கருத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.