மதுரை விமான நிலையத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் உள்ள ஸ்பைஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழிர்கள், மற்றும் நிர்வாகிகள் முகக்கவசம், மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பயணிகளை கையாள்வதாக எழுந்த புகாரை அடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பாளர் சந்திரமோகன், விமான நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்பைஜெட் நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள், கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் விமான பயணிகளை கையாள்வது தெரிய வந்தது. இதனையடுத்து சந்திரமோகன் ஐஏஎஸ் பரிந்துரையின் பேரில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன மேலாளரிடம் சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளிடம் கொரோனா தொற்று குறித்தும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டதோடு, மதுரை விமான நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.