கொரோனா வைரஸ்

'தடுப்பூசி செலுத்துவதில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை' - மா.சுப்பிரமணியன்

'தடுப்பூசி செலுத்துவதில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை' - மா.சுப்பிரமணியன்

Sinekadhara

தடுப்பூசி செலுத்துவதில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரும் கர்ப்பிணிகளுக்கு முகாம்களில் முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என கூறினார்.

தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கேட்டிருப்பதாகவும், விரைவில் தடுப்பூசிகள் வந்து சேரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒன்றிய அரசு என்ற வார்த்தை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றியத்திற்கு மிகச்சிறப்பான விளக்கத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.