கொரோனா வைரஸ்

இஸ்ரேலில் பயன்பாட்டுக்கு வந்தது 5 - 11 வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி

இஸ்ரேலில் பயன்பாட்டுக்கு வந்தது 5 - 11 வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி

நிவேதா ஜெகராஜா

இஸ்ரேலில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியதால் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என அறிவித்த நாடு இஸ்ரேல். இங்கு அண்மை காலமாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம். எனவே 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஏற்கெனவே 12 முதல் 17 வயதிலான பதின்பருவ குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது அதை குறைத்திருக்கிறது அந்நாட்டு அரசு.

குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் பைசர் தடுப்பூசியையே அந்நாடு தற்போதைக்கு அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல பெற்றோர் ஆர்வமாக தங்கள் குழந்தைகளை அழைத்து வருவதை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.