கொரோனா வைரஸ்

இன்றைய கொரோனா அப்டேட்: 24 மணி நேரத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் விநியோகம்?

இன்றைய கொரோனா அப்டேட்: 24 மணி நேரத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் விநியோகம்?

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,28,94,345 என்று உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,22,46,884 என உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.49% என்றுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,34,235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையிலிருப்போர் விகிதம், 0.31% என்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 302 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,13,266 என அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம், 1.20% என்றுள்ளது. அதேநேரத்தில் நாடு முழுவதும் இதுவரை 176.86 கோடி (1,76,86,89,266) தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் கடந்த 24 மணி நேரத்தில் 32.04 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10,30,016 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 13,166 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா உறுதிசெய்யப்படுவோர் விகிதம் 1.28 சதவிகிதமாக உள்ளது.