கொரோனா வைரஸ்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு?

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு?

jagadeesh

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,594 பேர் கொரோனாவால் பாதிப்பு; நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று 6,594 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் சற்று குறைவாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,035 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தமாக இதுவரை 4,26,61,370 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

அதே நேரத்தில் இன்று மட்டும் நாட்டில் 6 பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 5,24,777 பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 50,548 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவின் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.67 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. நேற்றைய தினம் நாட்டில் 14,65,182 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,95,35,70,360 டோஸ்கள் நாட்டில் செலுத்தப்பட்டு உள்ளன.

கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து உள்ளதால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நேற்று அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சருடன் காணொலி வாயிலாக ஆலோசனை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.