கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பிற்கு பின் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

கொரோனா பாதிப்பிற்கு பின் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

webteam

கொரோனாவுக்குப் பிறகு முதல் இரண்டு வாரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, “2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை ஸ்வீடனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,48,481 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 86,742 கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பாதிப்பிற்கான ஆபத்து இருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒஸ்வால்டோ பொன்சேகா ரோட்ரிகஸ் மற்றும் ஆய்வின் இணை முதல் எழுத்தாளர் கூறுகையில், “கொரோனாவுக்குப் பிறகு முதல் இரண்டு வாரங்களில் கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளது” என்றார்.

ஆய்வின் இணை ஆசிரியரான உமேயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயோனிஸ் கட்சோலாரிஸ் கூறுகையில், “கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான இருதய சிக்கல்களை சந்திப்பார்கள் என இந்த ஆய்வு காட்டுகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதும் எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.