கொரோனா வைரஸ்

கோவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால்... வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் வைத்த கோரிக்கை

கோவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால்... வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் வைத்த கோரிக்கை

Veeramani

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு உண்மையிலேயே கோவை மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற அக்கறை இருந்தால், மத்திய தொகுப்பிலிருந்து பாரபட்சம் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை செயல்பட மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “கோவை புறக்கணிக்கப்படுவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். ஆனால் உண்மையில் சென்னைக்கு அடுத்தப்படியாக அதிகளவில் கோயமுத்தூரில்தான்  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 38 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவைக்கு இதுவரை 6 லட்சத்து ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசனுக்கு உண்மையிலேயே கோவை மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற அக்கறை இருந்தால், மத்திய தொகுப்பிலிருந்து பாரபட்சம் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும். அதுபோல செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையம் 10 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது, அந்த ஆலையை தமிழ்நாடு முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதன்பின்னர் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனடியாக டெல்லி சென்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களை சந்தித்தனர். எனவே செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் மத்திய அரசே உடனடியாக உற்பத்தியை தொடங்குவதற்கு அல்லது தமிழக அரசு அந்த ஆலையில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வானதி சீனிவாசன் மத்திய அரசிடம்  இருந்து நல்ல பதிலை பெற்றுத்தர வேண்டும் ” என தெரிவித்தார்