கொரோனா வைரஸ்

மத்திய அரசுக்கு கோர்போவேக்ஸ் கொரோனா தடுப்பூசி விநியோகம் இன்று முதல் தொடக்கம்

மத்திய அரசுக்கு கோர்போவேக்ஸ் கொரோனா தடுப்பூசி விநியோகம் இன்று முதல் தொடக்கம்

Veeramani

கோர்போவேக்ஸ் கொரோனா தடுப்பூசியின் 300 மில்லியன் டோஸ்களை இன்று முதல் பயாலஜிக்கல் -இ நிறுவனம் மத்திய அரசுக்கு அனுப்ப தொடங்குகிறது

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பயாலஜிக்கல் -இ நிறுவனம் ஏற்கனவே 250 மில்லியன் டோஸ்களை தயாரித்துள்ளது, மீதமுள்ளவற்றை சில வாரங்களில் தயாரிப்பதாக அறிவித்துள்ளது.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 12-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு செலுத்துவதற்கான கோர்போவேக்ஸ்க்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் (DGCI) பரிந்துரைத்த நிலையில், தற்போது மத்திய அரசுக்கு 300 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. ரூ.1,500 கோடியை முன்பணமாக செலுத்தி, ஆகஸ்ட் 21, 2021 அன்று கோர்பேவேக்ஸுக்கு மத்திய அரசு ஆர்டர் வழங்கியது.

இதுவரை, நாட்டில் 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மொத்தம் 6,71,46,854 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 5.21 கோடிக்கும் அதிகமான சிறார்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 1,50,14,801 சிறார்களுக்கு முழுமையான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.