கொரோனா வைரஸ்

கேரளாவில் கொரோனாவிற்காக பிரத்யேக மருத்துவமனை திறப்பு

கேரளாவில் கொரோனாவிற்காக பிரத்யேக மருத்துவமனை திறப்பு

Sinekadhara


கேரளாவில் காசார்கோடு மாவட்டத்தில், டாட்டா நிறுவனத்தால் கட்டப்பட்ட கொரோனா பிரத்யேக மருத்துவமனையைத் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் பினராயி விஜயன். அரசு மற்றும் தனியார் இரண்டும் பொதுமக்களின் நலனுக்காக இணைந்து உருவாக்கிய இந்த திட்டத்திற்காக டாட்டா நிறுவனத்திற்கு நன்றி கூறியுள்ளார் முதலமைச்சர்.

551 படுக்கைகள் மற்றும் 36 வெண்டிலேட்டர்கள் கொண்ட இந்த மருத்துவமனை டாட்டா நிறுவனத்தால் ரூ.60 கோடி செலவில் ஐந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. காசார்கோடு, தெக்கில் கிராமத்தில் மாநில அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலப்பரப்பில் 80 ஆயிரம் சதுர அடியில் இந்த மருத்துவமனைக் கட்டப்பட்டுள்ளது.

தொற்றுநோய் காலங்களில் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் இந்த கட்டடம் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புக்கு ஓர் உதாரணம்.

இதற்கிடையே, 1400 படுக்கைகள் கொண்ட கொரோனா முதல்வரிசை சிகிச்சை மையம் திரிச்சூர் மாவட்டம் நட்டிகாவில் திறக்கப்பட்டுள்ளது. இதில் படுக்கைகள், இ-ரோபோட்ஸ், டெலி- மெடிசன், உணவு பரிமாற இ-பைக்குகள், பயோ - மருத்துவ திடக்கழிவு மேலாண்மை உட்பட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. லுலு நிறுவனத்தின் எம்.ஏ. யுசூஃப் இதை உருவாக்கியுள்ளார்.