மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கும் அவர், கடந்த நாள்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்துவந்தநிலையில், நேற்று முதல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணி நிலரப்படி, இந்தியாவில் ஒரே நாளில் 2,86,384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4,03,71,500 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 3,06,357 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,76,77,328 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,02,472 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 573 பேர் இறந்திருக்கின்றனர். இதனால் இதுவரை கொரோனாவால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 4,91,700 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய செய்தி: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் என்ன? வருவாய் ஏது? அதிகாரம் என்ன? விரிவான பார்வை