ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டில் இருந்தபடியே மருத்துவரிடம் தொலைத்தொடர்பு சேவை மூலம் இலவசமாக சிகிச்சை பெற உதவுகிறது e-Sanjeevaniopd. கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை என்பது எட்டாத சூழலில் இந்த டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவை ஒரு வரப்பிரசாதம் என சொல்லலாம்.
esanjeevaniopd.in அல்லது அப்ளிகேஷன் மூலம் சிகிச்சை பெற விரும்புபவர்கள் தங்களது பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் மருத்துவரிடம் ஆலோசனை அல்லது சிகிச்சை பெறுவதற்கான டோக்கன் எண்ணை ஜெனெரேட் செய்ய வேண்டும்.
பின்னர் அந்த டோக்கன் எண்ணை வைத்து லாக் இன் செய்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். அதன் பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டை பதிவிறக்கம் செய்து உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் மருந்து வாங்கி கொள்ளலாம்.
தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த e-Sanjeevaniopd இயங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பொது மற்றும் சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நாட்களும் தமிழகத்தில் இந்த e-Sanjeevaniopd மூலம் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.