கொரோனா வைரஸ்

’’தற்போதைய சூழலில் தடுப்பூசிகளின் பலன் கேள்விக்குறியே’’ - டாக்டர் வி.கே. பால்

’’தற்போதைய சூழலில் தடுப்பூசிகளின் பலன் கேள்விக்குறியே’’ - டாக்டர் வி.கே. பால்

Sinekadhara

தற்போதைய சூழ்நிலைகளில் எங்கள் தடுப்பூசிகள் பயனற்றதாகிவிடும் சாத்தியக்கூறுகள் உள்ளன என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார்.

நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே பால் பேசியபோது, ’’தற்போது தொற்றுகள் வளர்ந்துவரும் சூழ்நிலையில் தடுப்பூசிகள் பயனற்றதாகிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது. மேலும், தற்போது மாறிவரும் திரிபுகளை எதிர்த்து போராடும் வகையில் தடுப்பூசிகளை உருவாக்கவேண்டும். ஒமைக்ரான் பரவத்தொடங்கிய இந்த மூன்று வாரங்களில் நமக்கு பல்வேறு சந்தேகங்கள் எழும்பியிருக்கிறது. ஆனால் அதற்கான தீர்வுகள் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனவே விரைவாக மாற்றியமைக்கும் வகையில் தடுப்பூகளை நாம் வைத்திருப்பது அவசியமாகிறது. தடுப்பூசி மருந்துகளை மேம்படுத்துவதற்கு மிகவும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகம் முழுவதும் ஒருவர்கூட விட்டுப்போகாமல் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிப்பதே தற்போதைய முக்கிய நோக்கமாக இருக்கிறது என்றும், தொற்றுநோயைச் சமாளிக்க அறிவியலில் முதலீடுகளின் அவசியத்தை உணரவேண்டும் என்றும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை; ஆனாலும் சாத்தியமான திசையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இதை சமாளிக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.