கொரோனா வைரஸ்

"104 நாடுகளுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவிவிட்டது"- WHO

"104 நாடுகளுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவிவிட்டது"- WHO

jagadeesh

இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ் 104 நாடுகளுக்கு பரவிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக அளவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களில் இந்தியாவில் உருவான டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் இதுவரை 104 நாடுகளில் பரவி இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ், அண்மை காலமாக உயிரிழப்புகள் அதிகரிக்க இவ்வகை வைரஸே காரணம் எனக் கூறியுள்ளார்.

விரைவில் உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸாக டெல்டா வகை கொரோனா இருக்கும் என கணித்துள்ள டெட்ராஸ், கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.