கொரோனா வைரஸ்

ஊரடங்கு உத்தரவு: காய்கறி வண்டியை சேதப்படுத்திய காவலர் சஸ்பெண்ட்

ஊரடங்கு உத்தரவு: காய்கறி வண்டியை சேதப்படுத்திய காவலர் சஸ்பெண்ட்

jagadeesh

டெல்லியில் வண்டியை தள்ளிவிட்டு காய்கறிகளை சேதப்படுத்திய காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லியின் பட்டேல் நகர் பகுதியில் தள்ளு வண்டிகளில் காய்கறிகளை ஒரு வியாபாரி
வைத்திருந்தார். ஊரடங்கிலிருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வந்த காவலர் ஒருவர் எந்தவித காரணமும் இல்லாமல் வண்டிகளை தள்ளிவிட்டு காய்கறிகளை வீணடித்தார்.

இந்தக் காட்சி பரவத் தொடங்கியதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஊரடங்கின் நோக்கம்  காவல்துறையினருக்கே தெரியவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் அந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து காவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

குறிப்பாக ஊரடங்கை மீறி வெளியில் வருவோரை தாக்கக் கூடாது, வழக்கு மட்டுமே தொடரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14‌ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டினரையும் சேர்த்து நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது.