புதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனே மாஹேவில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரி முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
இது குறித்து புதியதலைமுறைக்கு பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி "கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க புதுச்சேரி முழுவதும் 23ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொருள்களை வாங்கும் பொதுமக்கள் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும், மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் வாங்கிக்கொள்ளலாம். 144 தடை உத்தரவையடுத்து பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது. மருத்துவ துறையினரின் சேவையை கை தட்டி பாராட்டு தெரிவிக்க ஏற்பாடு".
மேலும் தொடர்ந்த அவர் "புதுச்சேரி முழுவதும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திருமண நிகழ்வுகளை உரிய பாதுகாப்போடு நடத்த வேண்டும். மருத்துவதுறையினரின் சேவையை கைதட்டி பாராட்டு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.