கொரோனா வைரஸ்

கொரோனா அறிகுறி இருந்தும் நெகட்டிவ் ரிசல்ட்டா?: நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!

கொரோனா அறிகுறி இருந்தும் நெகட்டிவ் ரிசல்ட்டா?: நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!

EllusamyKarthik

கொரோனா அறிகுறிகள் இருந்தும் பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என வருபவர்களுக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும் 95,735 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கொரோனவுக்கான அறிகுறிகள் இருந்தும் ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்டில் நெகட்டிவ் என முடிவு வருபவர்களுக்கு RT-PCR முறையில் பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று பாதிப்புள்ளவர்களை துல்லியமாக அடையாளம் காணலாம். 

இதனால் நோய் தொற்று பாதிப்புடையவர்கள் பிறருக்கு தொற்றை பரப்புவதை தடுக்கவும் செய்யலாம் என கடிதம் மூலம் மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக தெரிவித்துள்ளது.